×

அரசு பெண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

 

திருத்துறைப்பூண்டி, ஆக. 11: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ மாரிமுத்து, நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஷ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், சரவணன், ஆசிரியர்கள் துரைராஜ், சிங்காரவேல், முத்துகுமார், பாலாஜி உள்ளிட்ட ஆசிரிய-ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு பெண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Free Bicycle Distribution ,Govt Girls School ,Thirutharapoondi ,Thiruthurapundi ,Govt. Girls Higher Secondary School ,Government Girls' School ,
× RELATED அரசு பெண்கள் பள்ளி மாணவி சாதனை